துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரெசெப் தையிப் எர்டோகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் எர்டோகன் 52% வாக்குகளையும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லு 48% வாக்குகளையும் பெற்றனர். அதிக பணவீக்கம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் இவற்றிற்கு பிறகு மீண்டும் அதிபராக எர்டோகன் தனது ஆட்சியை தொடர இருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது வாழ்த்து ட்வீட்டில், எங்கள் (இந்தியா-துருக்கி) இருதரப்பு நாடுகளின் உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, இனி வரும் காலங்களில் தொடர்ந்து வளரும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node