மேரிலாந்தின் முதல் இந்திய-அமெரிக்க லெப்டினன்ட் கவர்னராக, அருணா மில்லர் பதவியேற்றுள்ளார்.
ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்தின் லெப்டினன்ட் கவர்னராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற வரலாறு படைத்துள்ளார். அருணா மில்லர், பகவத் கீதையில் கையை வைத்து சத்தியம் செய்து தனது பதவிப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டார். லெப்டினன்ட் கவர்னர் பதவி என்பது கவர்னருக்கு பிறகு மிக உயர்ந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேரிலாண்ட் மாளிகையின் முன்னாள் பிரதிநிதியான 58 வயதான அருணா மில்லர், 1960 களில் அவரது 7 வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள், மாநிலத்தின் 10 வது லெப்டினன்ட் கவர்னராக பதவியேற்ற அருணா, இந்த வெற்றியை தனது குடும்பத்திற்கு அர்ப்பணித்தார்.