காணாமல் போன ஹாங்காங் மாடல் அழகியின் உடல் உறுப்புகள் குளிர்சாதன பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் மாடல் அழகி அபி சோய்-இன் உடல் உறுப்புகள் அவரது முன்னாள் மாமியார் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 28 வயதான அபி சோய் ஹாங்காங்கின் பேஷன் காட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். சமீபத்தில் எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் புகைப்படம் எடுக்கப்பட்டார். இதையடுத்து அழகி அபி சோய் காணாமல் போனதாக கடந்த இரண்டு தினங்களாக தேடப்பட்டு வந்தார்.
unknown nodeபின்னர் காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில் அபி சோய்யை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேடலில் ஒரு பகுதியாக லுங் மெய் என்ற கடற்கரை கிராமத்தில் உள்ள சோயின் முன்னாள் மாமியார் வாடகைக்கு இருந்த வீட்டை சோதனை செய்ததில் குளிர்சாதனப் பெட்டியில் அவரது இரு கால்களை கண்டுபிடித்தனர். மேலும் சோதனை செய்த போலீசார் வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பில் (சூப் பானை) கை விரல்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.
unknown nodeஇந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ஆலன் சுங், “பாதிக்கப்பட்டவரை தேடும் முயற்சியில் அவரது உடல் பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை, கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற பொருட்களும் அவர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது தலை இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
unknown nodeஇது தொடர்பாக அவரது மாமியார் உட்பட மூன்று பேரை கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், சோயின் முன்னாள் கணவரை இன்னும் தேடி வருவதாகவும் மேலும் கூறினார். இந்த சம்பவம் ஹாங்காங் முழுவதும் பதற்றத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.