ஆஸ்திரேலிய ஓபன் 2023 இலிருந்து உலகின் நம்பர்-1 வீரரான கார்லோஸ் அல்கராஸ் விலகியுள்ளார்.
2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான கார்லோஸ் அல்கராஸ், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், பயிற்சியின் போது நான், என் வலது காலில் உள்ள தசை சவ்வில் காயமடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
நான் ஆஸ்திரேலிய ஒபனில் விளையாடுவதற்கு கடினமாக பயிற்சி செய்தேன், துரதிர்ஷ்டவசமாக என்னால் முடியாமல் போனது, இருந்தும் விரைவில் குணமடைந்து, முன்னோக்கி செல்ல முயற்சிப்பேன் என்று அல்கராஸ் கூறினார். கார்லோஸ் அல்கராஸ், இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் விளையாடினால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருப்பார் என்று கூறப்படுகிறது.