கொரோனா எப்படி உருவானது? சீனாவில் உலக சுகாதார அமைப்பு ஆய்வு!

Where did the corona infection originate? How did it originate? The World Health Organization will conduct a study in China next year Jan.

கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? எப்படி உருவானது? உள்ளிட்டவை குறித்து சீனாவில் உலக சுகாதார அமைப்பு அடுத்தாண்டு ஆய்வு நடத்தவுள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பல நாடுகளில் பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், சில நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை பரவத்தொடங்கியது. இதனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா பரவலுக்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு, ஜனவரி மாதம் சீனாவில் ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவித்தது. இதற்கான பிரத்தேயகமாக குழு ஒன்றினை உருவாகியுள்ளதாகவும், அந்த குழு கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? எப்படி உருவானது? உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாகவும், இந்த ஆய்விற்கு சீன அரசு அனுமதி வழங்கியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.