எனது நண்பன் மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தேன்- போரிஸ் ஜான்சன்

I was eager to attend the Republic Day celebrations at the invitation of my friend Prime Minister Modi. Unable to participate due to corona.

எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்க முடியவில்லை.

இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் மக்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இந்த குடியரசு தினவிழாவையொட்டி இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்தியா உலகின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஜனநாயகம் நாடு. எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.