மகள்களின் பாதுகாப்பிற்காக பெண்ணாக மாறினேன்..ஈக்வடாரில் நடந்த பாசப்போராட்டம்..!

ஈக்வடாரில் சேர்ந்த நபர் தனது மகள்களின் பாதுகாப்பிற்காக தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ளார்.

ஈக்வடாரில் சேர்ந்த நபர் தனது மகள்களின் பாதுகாப்பிற்காக தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ளார்.

பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைத்துள்ள பாசமானது விலைமதிப்பற்றது. அவர்களின் பாசமானது குழதைகளின் நலனுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தூண்டும். இந்த பாசத்தால் தன்னையே ஒருவர் பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈக்வடாரை சேர்ந்த 47 வயதான ரெனே சலினாஸ் ராமோஸ் எனும் நபர் தனது மகள்களின் பாதுகாப்பிற்காக தன்னையே பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ளார்.

இவர் செய்த செயலானது திருநங்கைகள் உரிமைக்குழுவை கோபமடைய செய்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் குழந்தைகள் தந்தையுடன் இருக்கும் பொழுது ஏற்படும் சண்டைகளுக்கு தங்கள் நாட்டில் சாதகமான சட்டங்கள் இல்லை, தாய்மார்களுக்கே சட்டங்கள் சாதகமாக உள்ளது. அதனால் தான் எனது அடையாளத்தை சட்ட பூர்வமாக பெண்ணாக மாற்றினேன், என்று கூறினார்.

ரெனே சலினாஸ் ராமோஸ் எனும் தனது பெயரை ஃபெமெனினோ எனவும் மாற்றியுள்ளார். சலினாஸ் ராமோஸ் தனது குழந்தைகளுக்காக பெண்ணாக மாறியது உன்னதமான செயலாக இருந்தாலும் அவரது பாலின மாற்றத்தால் திருநங்கைகள் உரிமைக்குழுவைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலர்களை கோபமடைய செய்துள்ளது.