இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி செல்ல தடை ..!

Ban on Indians traveling to Saudi Arabia and Kuwait via the United Arab Emirates.

ஐக்கிய அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிப்பு.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் விமான போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சவுதி அரேபியா, துபாயில் சிக்கிக்கொண்டு வெளிநாட்டினர், இந்தியர்கள் பலர் நாடு திரும்பினார்.

இதையடுத்து, கடந்த வாரம் வரை சவூதி மற்றும் குவைத் செல்பவர்கள் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு செல்ல முடிந்த நிலையில் தற்போது சவுதி அரேபிய அரசு திடீரென 20  நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியா அடங்கும்.

இதனால், தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் தற்போது சவுதி மற்றும் குவைத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமீரக நாடுகளில் சிக்கி உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.