மீண்டும் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

The Israeli army has launched an airstrike on Gaza in retaliation for Hamas flying balloons.

தீ பிடிக்கும் வகையிலான பலுன்களை ஹமாஸ் அமைப்பினர் பறக்கவிட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே அடிக்கடி வான்வெளி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதியிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.  தற்போது இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியை பிடித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன், நாப்தலி பென்னட் அவர்கள் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காசாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் ராணுவம் தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் தீ பிடிக்கும் வகையிலான பலூன்களை பறக்கவிட்டதாகவும், அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காசா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.