தாய்க்கு பதவி பிரமாணம் செய்த போது குழந்தையை தூக்கி வைத்திருந்த நீதிபதி! வைரலாகும் வீடியோ!

Y'all. Judge Dinkins of the Tennessee Court of Appeals swore in my law school colleague with her baby on his hip, and I've honestly never loved him more.

நீதிபதி ரிச்சர்ட் டின்கின்ஸ், அமெரிக்காவின் டென்னிஸி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஜூலியானா லாமர் என்ற பெண்ணுக்கு, சில தினங்களுக்கு முன்பதாக வழக்கறிஞராக பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார்.அப்போது, லாமரின் கையில் குழந்தை இருந்துள்ளது. உடனே நீதிபதி குழந்தையை வாங்கி தனது கையில் வைத்துக் கொண்டு, பெண்ணுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த வீடியோவை லாமர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்வையிட்ட பலரும் தலைக்கணம் இல்லாமல் குழந்தையை வாங்கி கையில் வைத்திருந்த நீதிபதிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

unknown node