அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

Joe Biden became the 46th President of the United States and Kamala Harris of Indian descent became the Vice President.

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன்பதவியேற்கவுள்ள நிலையி, துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்பொழுது டிரம்ப் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினார்கள்.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு பிரிவு எச்சரித்துள்ளதை தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதவியேற்கும் விழா தற்போது தொடங்கியுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், மைக் பென்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அதனைதொடர்ந்து, பைடன் பதவியேற்கவுள்ளார்.