வட சீனாவில் நிலச்சரிவு..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வடக்கு பகுதியில் பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வட

North China landslide

சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வடக்கு பகுதியில் பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வட சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதில் 6 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த சியான் அவசர மேலாண்மை பணியகம், 21 பேர் இதுவரை இறந்துள்ளனர். மேலும், 6 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, 4 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஷான்சி மாகாணத்தில் சியானுக்கு தெற்கே உள்ள வைசிப்பிங் கிராமத்தில் பெய்த மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு, இரண்டு வீடுகள் மற்றும் சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.

இந்நிலையில், தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளுக்காக நூறு வீரர்களும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 186 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் பாதித்த பகுதியில் உள்ள 49 தகவல் தொடர்பு நிலையங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன. மேலும், 855 வீடுகளில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.