அமெரிக்காவின் லூயிஸ்வில் வங்கியில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி, 6 பேர் காயம்.!

அமெரிக்காவின் லூயிஸ்வில்லில் உள்ள வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் லூயிஸ்வில்லில் உள்ள வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் லூயிஸ்வில், பழைய தேசிய வங்கி இருக்கும் தெருவில் உள்ள கட்டிடத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 6 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த மெட்ரோ காவல்துறையின் துணைத் தலைவர் பால் ஹம்ப்ரே, துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக அருகிலுள்ள மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கவர்னர் ஆண்டி பெசீர், தனது ட்வீட்டில் உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பதிவிட்டுள்ளார்.

unknown node