கனடாவில் இரண்டாவது மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தின் பர்னபி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் சிட்டி ஹால் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு, தற்பொழுது சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தின் பர்னபி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய துணைத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைதியின் முன்னோடியான மகாத்மா காந்திஜி, பர்னபி வளாகத்தின் சிலையை சேதப்படுத்திய கொடூரமான குற்றத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்,” என்றும் “கனேடிய அதிகாரிகள் இவ்விவகாரத்தை அவசரமாக விசாரித்து குற்றவாளிகளை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்” என்றும் பதிவிட்டுள்ளது.
unknown node