தன் 7 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட தாய் .!

பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. அதில் நான்கு பேர் 10

பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 7 குழந்தை உள்ளனர்.

இந்நிலையில் தங்கள் 7 குழந்தைகளின் முன்னிலையில் அந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.

பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. அதில் நான்கு பேர் 10 வயதிற்குட்பட்ட  குழந்தைகள். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன் இந்த குழந்தைகளின் தந்தைக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

unknown node

இதையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது ஆனாலும் புற்றுநோய் குணமடையவில்லை. இதனால் அவரின் நாக்கு 90% அகற்றப்பட்டது. பின்னர் அவரது கால்களின் தோல்களை கொண்டு மருத்துவர்கள் பேசுவதற்கு செயற்கையாக நாக்கை ஒட்டவைத்தனர். இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த குழந்தைகளின் தந்தை இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் 12 வருடங்களாக வாழ்ந்து வந்த இந்த தம்பதி தங்கள் 7 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பேசிய அப்பெண், எங்களுடைய குழந்தைகள் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று அடிக்கடி கேட்பார்கள்.

unknown node

ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று எதிர்பார்க்கவில்லை. எனது கணவருக்கு குடிப்பழக்கம் , புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது ஆனால் அவரை புற்றுநோய் தாக்கியுள்ளது என கவலையுடன் கூறினார்.