சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு! கையொப்பமான 4 ஒப்பந்தங்கள்!
அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங்கை இன்று காலை சந்தித்தார்.

சிங்கப்பூர் : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு நேற்று முன்தினம் அரசு முறை பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்று 2 நாட்கள் அரசு முறைப் பயணமாகச் சிங்கப்பூருக்குச் சென்றார்.
அதன்படி, நேற்று மாலையில் சிங்கப்பூர் விமான நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சருமான கே.ஷண்முகம் நேரில் சென்று வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குச் சென்றடைந்தார். அங்கு அவரை சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங்கை வரவேற்றார். மேலும், பிரதமர் மோடிக்கு உரிய மரியாதைகளுடன் விருந்தும் அளித்தார்.
அதன் பின்னர் இந்தியா–சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் துறை போன்றவற்றின் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதன் பிறகு லாரன்ஸ் வோங் தலைமையில், உயர்மட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்குப் பேசிய அவர், “எனக்கு உற்சாக வரவேற்பு அளித்த சிங்கப்பூருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும். சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாகச் சிங்கப்பூர் உள்ளது.
இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அதிபரான தர்மன் சண்முக ரத்னம், ஓய்வு பெற்ற மூத்த அமைச்சரான கோ சோக் தோங் மற்றும் மூத்த அமைச்சரான லீ சியன் லூங் ஆகியோர் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். மேலும், அரசு முறை பயணமாகச் சென்ற பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடக்கத்து.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025