நாஷ்வில் கார் குண்டு வெடிப்பு...திட்டமிட்டு நடத்தப்பட்டது- காவல்துறை..!

A car bomb had exploded at an Iraqi police recruiting center at Kisak, west of Nashville. Christmas was celebrated yesterday.

நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் இருந்த குடியிருப்புகளில் இருந்த ஜன்னல்கள் , கட்டிடங்கள் சேதமடைந்தன.

இந்த கார் குண்டு வெடிப்பால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சில நிமிடங்கள் முன்பு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால்,  அப்பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேற்றினர்.

இந்த தகவல் எப்படி கிடைத்தது என்பதை காவல்துறை இன்னும் கூறவில்லை. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.