இந்தோனேசியாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் மாயம்!

A submarine in Indonesia belonging to the navy involved in training has gone missing with 53 people on board.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான இந்தோனேசியாவில் உள்ள நீர் மூழ்கி கப்பல் ஒன்று 53 பேருடன் மாயமாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள கே.ஜெ.ஆர் 402 எனும் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் 1980ஆம் ஆண்டிலிருந்து கடற்படையில் சேவையாற்றி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரக்கூடிய இந்த கப்பல் இராணுவ தலைவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளது.

பயிற்சி நேரத்தின்போது இந்த கப்பலில் மொத்தம் 53 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் பாலி தீவின் வடக்கு கடலில் திடீரென இந்த கப்பல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது. இந்நிலையில் கப்பலை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டிருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு கப்பல் உதவியையும் இந்தோனேஷியா கோரியுள்ளதாம்.