நியூசிலாந்து போலீஸ் அதிகாரிகள் தீபாவளியை பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடியுள்ளனர் .
உலகெங்கிலும் தீபாவளி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .அந்த வகையில் நியூசிலாந்தின் வெலிங்டன் போலீஸ் அகாடமியில் உள்ள அதிகாரிகள் தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடி பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளனர் .
தீபாவளி தினத்தை முன்னிட்டு போலீஸ் உடையில் வெலிங்டன் போலீஸ் அகாடமி அதிகாரிகள் 2016-ம் ஆண்டு வெளியான கபூர் & சன்ஸ் படத்தின் “லட்கி கார் கெய் சுல்” பாடல் மற்றும் அதே ஆண்டு வெளியான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கத்ரீனா கைப் நடித்த பார் பார் தேகோ படத்திலுள்ள “காலா சாஷ்மா ” ஆகிய பாலிவுட் பாடல்கள் ஆகியவற்றிற்கு நடனமாடி கலக்கியுள்ளனர் .
இதனை பார்வையாளர்கள் வீடியோ எடுத்தும் கைகளை தட்டியும் ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளனர் .தற்போது அந்த வீடியோ அதிக பேரால் ஷேர் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
unknown node