அடுத்தடுத்த வெளிநாட்டு பயண விவரம்.! தற்போது கயானாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக கயானாவுக்கு சென்றுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக கயானாவுக்கு சென்றுள்ளார்.

தென் அமெரிக்கா நாடான கயானாவுக்கு மூன்று நாள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அவர் கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனை அடைந்ததும் கயானாவின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஹக் டோட், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்றார்.

வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த கயானா பயணம், இந்தியா – வெளிநாட்டு மற்றும் சமூக உறவுகளுக்கான கவுன்சில் மூலம் (COFCOR) வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கான வாய்ப்பாகவும் இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ட்விட்டரில், கயானாவின் ஜார்ஜ்டவுனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக் டோடிடமிருந்து அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கயானா பயணத்தைத் தொடர்ந்து, ஜெய்சங்கர் ஏப்ரல் 24 முதல் 25 வரை பனாமாவுக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அவர் எட்டு நாடுகளின் மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் (எஸ்ஐசிஏ) பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். மேலும், ஏப்ரல் 25 முதல் 27 தேதிகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலம்பியா பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு அவர் அரசு, வணிகம் மற்றும் சிவில் சமூகத்தின் பல உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பார் என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

unknown node