காசு இல்லை.. கடன் வாங்கி அபராதம் கட்டுவேன்.! இங்கிலாந்து நீதிமன்றத்தை அதிர வைத்த நீரவ் மோடி.!

தன்னிடம் நிதி இல்லை, நீதிமன்ற அபராதத்தை செலுத்த கடன் வாங்கப் போவதாக, இந்தியாவில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடி கூறியுள்ளார்.

தன்னிடம் நிதி இல்லை, நீதிமன்ற அபராதத்தை செலுத்த கடன் வாங்கப் போவதாக, இந்தியாவில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடி கூறியுள்ளார்.

பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இந்தியாவில் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்து நீதிமன்ற உத்தரவுப்படி அபராதமான 1,50,000 பவுண்டுகளுக்கும் அதிகமான சட்டச் செலவுகளைச் செலுத்த கடன் வாங்கப்போவதாக கூறியுள்ளார்.

52 வயதான முன்னாள் கோடீஸ்வரர் நீரவ் மோடி, கடந்த ஆண்டு 2 பில்லியன் டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில், இந்தியாவிலிருந்து தப்பி ஓடியதால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு இந்தியா தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இதற்கு எதிரான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் தோல்வியடைந்தார். இதனால் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், லண்டனில் உள்ள பார்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வீடியோ மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.

லண்டனில் அவரது ஒப்படைப்பு தொடர்பான மேல்முறையீடு மனுவை மறுஆய்வு செய்யும் விசாரணை, 6 மாதத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற நீரவ் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதம் 10,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்த அபராதத்தொகையை எவ்வாறு செலுத்துவீர்கள் என கேட்கப்பட்டதற்கு, இந்தியாவில் தனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் தன்னிடம் போதிய நிதி இல்லை, தான் கடன் வாங்கப் போவதாக நீதிமன்றத்தில் நீரவ் பதிலளித்தார்.