கனடா அரசு, தன் குடிமக்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த வாரத்திற்கு இரண்டு பானங்கள் மட்டும் குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் மக்கள் மது அருந்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அரசு, வழிகாட்டுதல் அடிப்படையில் மது அருந்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி நீங்கள் அருந்தினால் வாரத்திற்கு இரண்டு பானங்களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இதேபோன்று ஒரு வழிகாட்டுதல் பரிந்துரை கனடா அரசங்கத்தால் வெளியிடப்பட்டது, இதில் பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 10 பானங்களையும் ஆண்களுக்கு 15 பானங்களையும் அனுமதித்தது. தற்போது அதிலிருந்து குறைந்து, 2 பானங்களுக்கு மேல் அருந்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.