வடகொரியாவின் முக்கிய ராணுவ அதிகாரி பதவி நீக்கம்! கிம் ஜாங்-உன் அதிரடி.!

வடகொரியாவின் 2-வது மிகப்பெரிய ராணுவ அதிகாரியை, அதிபர் கிம் ஜாங்-உன் பதவி நீக்கம் செய்துள்ளார்.

வடகொரியாவின் 2-வது மிகப்பெரிய ராணுவ அதிகாரியை, அதிபர் கிம் ஜாங்-உன் பதவி நீக்கம் செய்துள்ளார்.

நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த ராணுவ அதிகாரியான பாக் ஜாங்-சோனை, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பதவி நீக்கம் செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் தலைமையில்லாத, நிறைய எண்ணிக்கையிலான ஏவுகணை சோதனைகளை பாக் ஜாங்-சோன் மேற்பார்வையிட்டு வழிநடத்தியது அவரது பதவி நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்டுகிறது.

அவருக்கு பதிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ரி யோங் கில், தற்போது மத்திய இராணுவ ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கிம் ஜாங்-உன், தலைமையிலான நாட்டின் மத்திய இராணுவ ஆணையம், வடகொரியாவின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ அதிகாரமாக கருதப்படுகிறது, இது பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் மேலானது என்று கூறப்படுகிறது.