தென் கொரியாவுடன் அணு ஆயுதப் பயிற்சி குறித்து விவாதிக்கவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகள் குறித்து அமெரிக்கா, விவாதிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வடகொரியாவிற்கு எதிராக கூட்டு அணுஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்வது பற்றி விவாதித்து வருவதாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியிருந்தார்.
அமெரிக்காவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், ஆனால் இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடவேண்டும் எனவும் தென் கொரிய அதிபர் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துள்ளார், அமெரிக்கா அவ்வாறு கூட்டு அணுஆயுதப் பயிற்சி குறித்து தென்கொரியாவுடன் விவாதிக்கவில்லை என கூறியுள்ளார்.