இங்கிலாந்திற்குள் இந்தியர்கள் வருவதற்கான பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு அறிவிப்பு...!

From today, travel restrictions on Indians entering the UK have been relaxed.

இன்று முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்குள் வருவதற்கான  பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ள சில நாடுகள், கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு கடுமையான பயண  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நாடுகள் இருந்து வரக்கூடிய பயணிகள் கட்டாயம் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த சிவப்பு நிற பட்டியலில் இருந்த நாடுகள் பொன்னிற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று காலை 4 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இனிமேல் இந்தியாவில் இருந்து வரக்கூடிய 2 டேஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமலேயே இனி இங்கிலாந்து நாட்டிற்குள் வரலாம்.