உலகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து 8 லட்சம் பேர் குணமடைந்தனர்.!

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 807,037 எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 807,037 எட்டியுள்ளது.

சீனாவில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 28,31,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும்,  197,318 பேர்  உயிரிழந்துள்ளனர். இதையெடுத்து ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 807,037 எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 925,232 பேரும், ஸ்பெயினில் 219,764 பேரும், இத்தாலியில் 192,994 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.