உலகின் நுரையீரல் என்று அனைவராலும் கருதப்படும் அமேசான் காட்டில் சில நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. அமேசான் காடு பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும்.இந்த ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இந்த காட்டின் பெரும்பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே அமேசான் காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.தீயை அணைக்க பிரேசில் நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.பல்வேறு நாடுகளின் […]
கஜகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலமாக ஃபெடோர் என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளது. அங்கு இந்த ரோபோ மின் இணைப்புகளை சரி செய்தல் , தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளது. இந்த ரோபோ 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் […]
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பொது சபையில் பேச உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இன்று ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் அமெரிக்க […]
அமெரிக்காவில் டெக்ஸால் பகுதியை சார்ந்த ஹார்லி மோர்கன்(19) என்பவர் தன் தோழி பவுட்ரியாக்ஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தின் நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தது பார்க்கிங்கில் இருந்த தங்கள் காரில் ஏறினார். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று […]
இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க, அதன் பின்னர் நேற்று முதல் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று 10 மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பல ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், இந்தியா தான் தீவிரவாதிகள் பெயரை சொல்லி பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. என்றும், பயங்கரவாதிகள் ஒரு […]
பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ஜி7 கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் விரும்புகிறது. முதல் ரஃபேல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் . […]
ட்ரவோர்ட் மல்லார்ட் அவர்கள் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு குழந்தைகளை கொண்டுவர அனுமதியளித்தார். மேலும், அவர்களை பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். இதனையடுத்து, நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதம் நடந்துக்க கொண்டிருந்தபோது, எம்.பி ஒருவர் தனது குழந்தையை வைத்துள்ளார். அவர் இந்த விவாதத்தில் அந்த எம்.பி பங்கேற்க முயன்றார். அப்போது சாபாநாயகர் அவரின் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். இதனையடுத்து, அந்த குழந்தையை […]
அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி சோண்ட்ரா பேட்டர் என்ற 68 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.இவர் வேலை செய்யும் கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலையை யார் செய்தது என காவல் துறை பல வருடங்களாக தேடி வந்தனர்.கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ஆதரங்களை மையமாக வைத்து கொண்டு காவல் துறை விசாரணை நடத்தி வந்து உள்ளனர். சோண்ட்ரா பேட்டர் இறப்பதற்கு முன் கடைக்கு ஒருவர் வந்து […]
அயர்லாந்தில் டர்பன் என்ற நகரில் ரவிஸ் கிச்சன் என்ற இந்திய உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் இந்திய உணவுக்கு பெயர் போனது.இந்த ஹோட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் தன்னுடன் வேலை செய்யும் இரண்டு பேருடன் சென்று உள்ளார். அப்போது இவர்கள் டேபிளுக்கு சர்வர்கள் யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. நீண்டநேரமாக சர்வர்கள் யாரும் வராததால் அருகில் இருந்த பெண் சர்வரிடம் ஏன் எங்களிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லை என மயங்க் பட்நாகர் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது Spoke to my two good friends, Prime Minister Modi of India, and Prime Minister Khan of Pakistan, regarding Trade, Strategic Partnerships and, most importantly, for India and […]
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சாரா டெய்லர் ஆவார்.இவர் பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இவர் சமீபகாலமாக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.மேலும் அடுத்து வர இருக்கும் t20 தொடரிலும் இவர் அணியில் இல்லை. கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான t20 போட்டியில் அறிமுகமான இவர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளும் 126 ஒரு நாள் போட்டிகளும் 90 t20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். […]
அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரத்தில் மைன் மெடிக்கல் உள்ளது.இந்த மெடிக்கல் மையத்தில் பணியாற்றி வந்த ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்தனர். அப்போது அந்த மருத்துவ மையம் “எங்கள் மையத்தில் வேலை செய்யும் ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளனர்.அவர்கள் தங்களது குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் பிறக்கும் என எதிர்பார்கின்றனர்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என தெரிவித்தனர்.மேலும் அந்த ஒன்பது நர்ஸ்களின் புகைப்படங்களிலும் அந்த மருத்துவமனை சமூக வலைதளத்தில் […]
கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலில் 20 பேர் இறந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாஸ்கோ என்பவரின் மனைவி மார்ஜி (63) இழந்தார். பாஸ்கோவிற்கு உறவினர்கள் அதிகம் இல்லை எனவும் , மனைவி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க யாரும் இருக்கமாட்டார்கள் என மனம் வருந்தினார். இந்த தகவலை […]
தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த கடற்பசுவை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை […]
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூட்டம் முடிந்த பின்பு வெளியே வந்த ரஸ்யாவை சேர்ந்த பிரிதிநிதி தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் தனிப்பட்ட அஜெண்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி என இருதரப்பினரிடமும் நாங்கள் நட்பு பாராட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ரஸ்யா இந்தியாவிற்கு ஆதரவாகவே பேசியுள்ளது .பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
காஷ்மீரின் சிறப்பு சட்டம் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்று வருகிறது .ஐநாவில் 5 நிரந்தர உறுப்பினர்கள் 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் ஐநாவில் கடிதம் அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல் சீனாவும் காஷ்மீர் பிரச்னை குறித்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டது .இதில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்ற ஐநா […]
நைஜீரியா நாட்டில் சினிமா வட்டாரம் நோலிவுட் ( NOLLYWOOD ) என அழைக்கப்படுகிறது. நைஜீரிய நாட்டில் ஒரு 19 வயது இளைஞன் சயின்ஸ் பிக்ஷன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அந்த இளைஞர் சின்ன சின்ன பிரமப்பூட்டும் குறும்படங்களை உருவாக்கி உள்ளார். இந்த இளைஞர்களிடம் இருப்பது ஓர் உடைந்த கேமிரா போன். அதுதான் இவர்களுக்கு கேமிரா. ஒரு சுமாரான லேப்டாப் இதுதான் இவர்களின் ஷூட்டிங் எடிட்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் பணிகளுக்கான முக்கிய சொத்து. இந்த இளைஞர்களுக்கு தலைவர் […]
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இருந்தாலும் வளர்ச்சியடையாத பலுசிஸ்தான் பகுதியாகவே உள்ளது.இங்குள்ள ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் நேற்று இந்திய சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்தது. சில நாள்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்து 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.இந்நிலையில் இந்திய […]
இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீக முறைகளால், பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக தீமைகள் ஏற்படுகிறது. இன்றைய இளம் சமூகத்தினரை சமூக வலைத்தளங்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேஸ் புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் மற்றும் டிக் டாக் என இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் தான் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அன்ராய்டு மொபைலை பயன்படுத்துகின்றனர். இன்று டிக் டாக் என்ற செயலி […]