பாகிஸ்தானில் புதியதாக 553 பேருக்கு கொரோனா ; 248,577 பேர் குணமடைந்தனர்

கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில்  புதியதாக 553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 279,699

கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில்  புதியதாக 553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 279,699 ஆக அதிகரித்துள்ளது .

இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) தெரிவிக்கையில் பக்ரீத் இரண்டாம் நாளில் தொற்று காரணமாக மேலும் 6 பேர் உயிர் இழந்ததாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,976 ஆக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 248,577 பேர் மீண்டு வந்துள்ளதாகவும் ,இன்னும் 25,146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.