அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள புறாக்கள் தொப்பியுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்க கூடும் என தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஏராளமான புறாக்களின் தலையில் வித்தியாசமான ஏதோ இருப்பது போன்று இருந்தது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புறாக்களின் அருகில் சென்று உற்று பார்த்தபோது தான் தெரிந்தது. புறாக்களின் தலையில் தொப்பிகள் இருந்து உள்ளது.
இதை பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.பின்னர் தொப்பியுடன் இருக்கும் புறாக்களின் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. புறாக்கள் தொப்பிகளுடன் அழகாக இருந்தாலும் , புறாக்களை துன்புறுத்துவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறினர்.
unknown nodeதன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “புறாக்களின் தலையில் தொப்பி எப்படி வைத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்க கூடும்.
இது போன்று செய்தது யார் என விசாரணை செய்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு பார்த்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறினார்.