போப் பிரான்சிஸ் சுவாச நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி.!

போப் பிரான்சிஸ் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும் வேடிகான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி, தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்காக அவர் பாலிக்லினிகோ ஏ ஜெமெல்லிக்கு, அழைத்துச் செல்லப்பட்டதாக புரூனி கூறினார்.

சமீப நாட்களில் போப் பிரான்சிஸ் சில சுவாசக் கோளாறுகள் இருப்பதாக கூறியதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், சுவாச நோய்த்தொற்று இருப்பதைக் காட்டியது, அவருக்கு சில நாட்கள் தகுந்த மருத்துவமனை மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், போப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.