நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
காலை 3:44 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளை 10 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களில் கெர்மடெக் தீவுகளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.