ரஷ்ய இராணுவத்தின் வலிமை, உக்ரைனில் ரஷ்யாவின் வெற்றியை தவிர்க்க முடியாததாக்குகிறது என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் சக்தி வாய்ந்த ராணுவம் மற்றும் அதன் ஆயதங்களுக்கான தொழிற்சாலையில் தற்போது உற்பத்தியும் அதிகரித்து வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
ரஷ்யாவின் இந்த வலிமை வாய்ந்த ராணுவத்தின் மூலம், உக்ரைன் போரில் எங்களது வெற்றியை இது மேலும் உறுதியாக்குகிறது. ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாத ஒன்று என அவர் மேலும் கூறினார். உலகிலுள்ள மற்ற நாடுகளில் மொத்தமாக தயாரிக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் ஏவுகணைகளை, ரஷ்யாவும் அதே எண்ணிக்கையில் தயார் செய்கிறது. இது அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம் என்று புதின் தெரிவித்தார்.