திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடைபெறும்- ட்ரம்ப் அறிவிப்பு

திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடைபெறும்என்று  ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடைபெறும்என்று  ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில்,அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இந்நிலையில் திட்டமிட்டப்படி நவம்பர் மாதத்தில்  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று  ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.