மேற்கு ஆஸ்திரேலியாவில் டிரக்கில் இருந்து எக்ஸ்ரே கதிர்களை வெளிவிடும் கேப்சூல் காணாமல் போனது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் டிரக்கில் இருந்து கதிரியக்க கேப்சூல் ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த கேப்சூல் ஒரு மணி நேரத்திற்கு 10 எக்ஸ்ரே கதிர்வீச்சுக்கு சமமான கதிர்வீச்சுகளை வெளிவிடும் தன்மை கொண்டது. கேப்சூல் தொலைந்து போனது சுகாதார துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 10 அன்று பில்பரா பிராந்தியத்தில் நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கப் பகுதிக்கும் பெர்த்தின் வடகிழக்கு பகுதிகளுக்கும் இடையே டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட போது அது தவறவிட பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
unknown noderadioactive capsule [Image Source : Twitter/@StuWatts73]
இந்த கேப்சூலில் சுரங்க செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் சீசியம்-137 என்ற பொருள் உள்ளது. இதை மக்கள் யாரவது தொட்டால் அது அவர்களுக்கு கடுமையான உடல்நல குறைவை ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் 8-6 மி.மீ அளவுள்ள கேப்சூலைப் பார்த்தால் அதிலிருந்து விலகி இருக்குமாறும் இது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeடாக்டர் ராபர்ட்சன் கூறியதாவது :
எங்களின் கவலை என்னவென்று தெரியாமல் அந்த பொருள் என்னவென்று தெரியாமல் யாரவது எடுப்பார்கள், அழகுக்காக தங்கள் காரில் வைத்திருக்கலாம் அல்லது யாருக்காவது கொடுக்கலாம் என்று கூறினார். இந்த கேப்சூலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு தீக்காயங்கள் அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும். மக்கள் கேப்சூல் அல்லது அதைப் போன்ற பொருளை பார்த்தால், அதிலிருந்து விலகி இருங்கள், அதைத் தொடவோ எடுக்கவோ வேண்டாம் என்று அவர் மேலும் கூறினார்.
unknown node[Image Source : abc.net]