மீண்டும் விமான சேவையை தொடங்குங்கள் – இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் கோரிக்கை!

Afghanistan has demanded that India resume flights.

மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்து பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

தற்பொழுதும் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு தலிபான்கள் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கடிதம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.