அமெரிக்காவில் எச்-1 பி விசாவிற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

Former US President Donald Trump has imposed some restrictions on H1B visas. The U.S. Department of Immigration has announced that these restrictions will be lifted.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவிற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்.

இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்கக் குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தற்காலிகமாக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் போது வழங்கப்படக்கூடிய விசா தான் எச்-1 பி. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணி புரியக்கூடிய பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா எச்-1 பி மற்றும் எச்-4 ஆகிய விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த விசாவின் மூலமாக இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் எச்-1 பி விசா வழங்குவதில் புதிதாக பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இதனை அடுத்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக எச்-1 பி விசா வழங்குவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடைக்கால தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் எச்-1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி தற்போது நேற்று அமெரிக்க குடியேற்ற துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த எச்-1 பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.