மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார்.! காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.!

U.S. Cage Gillian lost control of his father's car worth Rs 25 crore due to low tire pressure and crashed into a tree.

அமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம் கில்லியன்.இவரது 17 வயது மகனான கேஜ் கில்லியன் தந்தையின் ரூ.25.16 கோடி (3.4 மில்லியன் டாலர்)மதிப்பிலான பகானி ஹுவேரா ரோட்ஸ்டரை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களாகியுள்ளது .

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி டீனேஜ் யூடுயூபரான கேஜ் கில்லியன் தனது நண்பர்களுடன் தந்தையின் ஊதா நிற பகானி ஹுவேரா ரோட்ஸ்டரை காரை ஒரு டிரைவிற்காக எடுத்து சென்றுள்ளார்.அப்போது அவரது கார் குறைந்த டயர் அழுத்தம் காரணமாக கேஜ் கில்லியன் தனது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் நொறுங்கியது.இந்த விபத்தில் அவர் இடது கை காயமடைந்துள்ளது .

இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் ,யூடுயூப் பக்கத்திலும் வெளியிட்டு கேஜ் கில்லியன் கூறியதாவது,என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான விஷயம் என்றும் , கடவுள் தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் , அதற்கு அவருக்கு நன்றி என்று கூறிய‌ கேஜ் கில்லியன் , இந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறிய போது,காரின் இழப்பிற்காக அவர் வருத்தப்பட்டதாகவும்,இருப்பினும் அவரது மகன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்ததாகவும் கூறினார்.

unknown node