ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் சீக்கிரமே இறந்து விடுவார் என உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் தகவல்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த நிலையில் இந்த போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி வரும் நிலையில், இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போது வரை தென்படவில்லை.
ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், ரஷ்யா இதற்கு செவி சாய்த்த வண்ணம் இல்லை. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடனொவ் கூறுகையில் 70 வயதான ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் சீக்கிரமே இறந்து விடுவார் என்றும், புதின் தீவிரமான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.