சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சி..! எங்கே..? எப்போது தொடங்குகிறது.?

2023 சாம்சங் கேலக்சி அன்பேக்டு (Samsung Galaxy Unpacked) நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

2023 சாம்சங் கேலக்சி அன்பேக்டு (Samsung Galaxy Unpacked) நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும்  தொலைக்காட்சிகள், எலக்ரானிக் பொருட்கள் போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த, சாம்சங் அன்பேக்டு 2023 (Samsung Galaxy Unpacked 2023) நிகழ்ச்சியை அதிகாரப் பூர்வமாக நடத்த உள்ளது.

unknown node

நிகழ்ச்சி நடைபெரும் நேரம் மற்றும் இடம்:

சாம்சங் கேலக்சி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்ச்சி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேசோனிக் ஆடிட்டோரியத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு காலை 10 மணிக்கு (IST 11:30 PM)  சான் பிரான்சிஸ்கோ மற்றும் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நிகழ்வைப் பார்க்க ஆர்வமுள்ளவர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடியாகப் பார்க்கலாம்.

unknown node

Galaxy Unpacked 2023: சிறப்பு என்ன?

Galaxy Unpacked 2023 இன் டீஸர் விடியோவை சாம்சங் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  அதில் “Epic Nights Are Coming Soon” என்ற டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாம்சங்கின் முழு கவனமும் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபி மீது உள்ளது என்பதை காட்டுகிறது. சாம்சங் கேமரா மட்டுமின்றி, மொபைல் போன்களில் பல முன்னேற்றங்களையும் கொண்டு வர உள்ளது.

unknown node

அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் போன் :

இந்த நிகழ்வில் சாம்சங்கின் கேலக்சி எஸ்23 (Galaxy S23) சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இந்த சீரிஸில் மூன்று வகைகளான Galaxy S23, Galaxy S23+ மற்றும் Galaxy S23 Ultra மொபைல் போன்கள் அறிமுகமாக உள்ளது. டாப் வேரியண்டில், நிறுவனம் 200 எம்பி கேமராவைக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட் போன் ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) செயலியைக் கொண்டுள்ளதாகவும், 1TB வரையிலான சேமிப்பு இடத்தைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

unknown node

Samsung Galaxy S23 சீரிஸ்: கேமரா மற்றும் விலை விவரம்

சாம்சங் சமீபத்தில் ஸ்மார்ட்போனுக்கான புதிய 200MP கேமரா சென்சார் ஒன்றை அறிவித்தது. இதனால் எஸ்-23 சீரிஸில் கேமரா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கலாம். ஏற்கனவே உள்ள கேலக்ஸி எஸ் 22 அல்ட்ராவில் (Galaxy S22 Ultra) 108MP கேமரா சென்சாரை கொண்டுள்ளது. ஆனால் அதை விட பெரிய லென்ஸ் S23 அல்ட்ராவில் இருக்கும். இந்தியாவில் S23-இன் விலை ரூ.79,999ல் இருந்து தொடங்கி, டாப் மாடலுக்கு ரூ.83,999 வரை உயர வாய்ப்புள்ளது. S23+ ன் விலை ரூ. 89,999 முதல் தொடங்கலாம், அதே நேரத்தில் கேலக்ஸி S23 அல்ட்ரா (Galaxy S22 Ultra) ரூ.1,14,999 ஆரம்ப விலையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node