பிலிப்பைன்சில் மே 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.பிலிப்பைன்ஸ் நாட்டில் 7,192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.477 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் , பிலிப்பைன்ஸ் அதிபர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு மே 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.