அமெரிக்காவில் 250 அடி உயர சரிவில் விழுந்த டெஸ்லா காரில் இருந்த 4 பேர் உயிர் தப்பினர்.
அமெரிக்கா: வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டெவில்ஸ் ஸ்லைடு என்ற பகுதிக்கு அருகே டெஸ்லா கார் சென்று கொண்டிருந்தது. ஆட்டோபைலட் நிலையில் சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் அருகில் உள்ள 250 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
எதிர்பாராத விதமாக காரில் பயணித்த நான்கு வயது சிறுமி, ஒன்பது வயது சிறுவன் உட்பட காரில் இருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துக்குறித்து அதிகாரிகள் கூறுகையில் 250 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிருடன் இருப்பது மிகவும் அதிசயம் என கூறியுள்ளனர். மேலும் கார் ஆட்டோபைலட் நிலையில் சென்று கொண்டிருந்தது என்று அவர்கள் நம்பவில்லை.
unknown node