அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூடு.! 8 பேர் காயம்.!

Eight people were injured in a shooting at a shopping mall in Wisconsin, USA, and the culprit is said to have fled.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் நகரின் வாவ்வாடேசாவில் மேஃபேர் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது.அங்கு வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார் .அந்த துப்பாக்கி சூட்டில் 8 நபர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த 8 பேரில் 7 பேர் பெரியவர்கள் மற்றும் ஒரு இளைஞன் ஆவர் . அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் , அவர்களுக்கு பெரிய காயமா என்பது தெரியவில்லை.ஆனால் உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்டவராக வெள்ளையாக தான் இருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் .மேலும் அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாகவும் ,மாலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.