17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்கள்..!

The boy, from Essex in the south-east of England, appeared in Westminster Magistrates' Court in London yesterday via video link.

இங்கிலாந்து நீதிமன்றம் 17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்களை  சாட்டியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் நகரைச் சேர்ந்த இந்த சிறுவன் வீடியோ இணைப்பு வழியாக நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். கிழக்கு பிராந்திய சிறப்பு செயல்பாட்டு பிரிவு மற்றும் எசெக்ஸ் காவல்துறையினரின் ஆதரவுடன் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் வடக்கு கிழக்கு (சி.டி.பி) தலைமையிலான விசாரணையைத் தொடர்ந்து 17 வயது சிறுவன்  ஆறு பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அன்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ஒரு குற்றம், பயங்கரவாத வெளியீட்டைப் பரப்பிய ஒரு குற்றம் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்யும்  ஒரு நபருக்கு பயனுள்ளதாக இருக்கும் பொருளை வைத்திருப்பதற்கான ஆறு குற்றங்களை அவர் மீது வைக்கப்பட்டது.