போட்டோ ஷூட்டில் பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் வீடியோ..!

பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியபோது அவரை பாம்பு கடித்துள்ளது. பாடகியின் முகத்தில் பாம்பு கடிக்கும் வீடியோவை பாடகி Maeta தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார். 21 வயதான பாடகி Maeta தனது மார்பில் மேல்  ஒரு கருப்பு நிற பாம்பை வைத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த  கறுப்பு பாம்பு மேல் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒருவர்​​வெள்ளைப் பாம்பை அவள் மீது விட முயற்சி செய்தார்.

ஆனால் அதற்குள் பாடகி Maeta  கன்னத்திற்கு அருகில் வந்த கருப்பு பாம்பு அவரின் முகத்தில் கடித்தது. உடனடியாக பாம்பை பாடகி தூக்கி எறிந்தார். இந்த வீடீயோவை  தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார்  இந்த வீடியோ கிளிப் ஒரே வாரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோரால்  பார்க்கப்பட்டுள்ளது.

unknown node