அண்டார்டிகாவில் உள்ள கள ஆய்வு முகாமில், ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க்-இன் இன்டர்நெட் சோதனை செய்யப்பட்டது.
அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான பனி ஆய்வு மையமான கோல்ட்எக்ஸ்(COLDEX) கள ஆய்வு முகாமில், ஆராய்ச்சியாளர்கள் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணையத்தை சோதனை செய்துள்ளனர்.
இது தவிர தேசிய அறிவியல் அறக்கட்டளை நிறுவனமும் இதனை, மெக்முர்டோ நிலையத்தில் சோதனை செய்துள்ளது. கோல்ட்எக்ஸ்(COLDEX)இன் கள ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான(டேட்டா) இயக்குனர் பீட்டர் நெஃப் இது குறித்து கூறும்போது, ஸ்டார்லிங்க் மற்றும் பிற அதிவேக இணையதள இணைப்பு முறைகள் நமது தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது.
மேலும் பனிக்கட்டியில் நமது அறிவியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.