உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஸ்பேஸ்எக்ஸ்; சில நிமிடத்தில் வானில் வெடித்தது; வீடியோ வைரல்.!

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்பேஸ்எக்ஸ் இன் ஸ்டார்ஷிப், விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்பேஸ்எக்ஸ் இன் ஸ்டார்ஷிப், விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்திருக்கிறது.

டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள தனியார் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிலையமான ஸ்டார்பேஸில் இருந்து, பிரம்மாண்டமான ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பாலும் விண்வெளியில் அனுப்பும் திட்டமாக, உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ்இன் ஸ்டார்ஷிப் வடிவமைத்தது.

இதன் சோதனை ஓட்டமாக இந்த ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது, ஸ்டார்ஷிப் காப்ஸ்யூல்(விண்கலம்), முதல் நிலையில் ராக்கெட் பூஸ்டரில் இருந்து மூன்று நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து ராக்கெட் மேலே பயணிக்க  திட்டமிடப்பட்டது, ஆனால் அதற்கு முன்னரே அதாவது காப்ஸ்யூல் பிரியும் முன்பாக ராக்கெட் வெடித்துள்ளது.unknown node