கொரோனா வைரஸின் தாக்கம் உலகில் உள்ள பல நாடுகளில் பரவியுள்ளது.சில நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்பெயின் நாடு. இந்த நாட்டில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் கார்மென் கால்வோ (Carmen Calvo).தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.மேலும் அவர் நலமாக இருப்பதாகவும்,அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.