இலங்கை இனப்படுகொலை – இவர்களுக்கு கனடாவுக்குள் நுழைய தடை..!

முன்னாள் ஜனாதிபதிகளாக இருந்த மஹிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேர் கனடா நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடி தடை.

முன்னாள் ஜனாதிபதிகளாக இருந்த மஹிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேர் கனடா நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடி தடை.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தமிழ விடுதலை புலிகள் தலைமையில் நடைபெற்ற நிலையில் 2009 ஆம் ஆண்டு இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த போராட்டத்தின் போது, அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கனடா அரசு இலங்கை தமிழர்களிடம் இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக முன்னாள் ஜனாதிபதிகளாக இருந்த மஹிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேரை நாட்டிற்குள் நுழைய அதிரடி தடை விதித்துள்ளது.