ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 6 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பொதுமக்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பொதுமக்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் வெளியுறவு அமைச்சகம் அருகே நடந்த, தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு படை அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு சுட்டதில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூன்று தலிபான் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்திற்கு அருகில் தாக்குதல் நடத்தப்படுவது இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாகும்.