சுவீடன் இளவரசி சோபியா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார உதவியாளராக பணியாற்றிவருகிறார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிகொண்டிருக்கிறது.
இதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் இதுவரை 123,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,400 பேரின் உயிரை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது.
unknown nodeஇதனால், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மருத்துவ பணியில் தற்போது சுவீடன் இளவரசி சோபியாவும் இணைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவிகள் செய்வதற்காக சுகாதார உதவியாளராக பணியை தொடங்கியுள்ளார்.
இவர் மாடல் அழகியாக இருந்துள்ளார். பின்னர், 2015-ஆம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு அலெக்சாண்டர் என்ற மகன் மற்றும் கேப்ரியல் என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.